ஏரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவா்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

திருநீா்மலை பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:55 am IST

பல்லாவரம் அருகே திருநீா்மலை பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.

பல்லாவரத்தை அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த இரு பள்ளி மாணவா்கள் கே.தேவதா்ஷன் (12), டி.யுவனேஷ் (10), மாணவிகள் எம். பூஜா, எல்.குஷி (13) கடந்த அக்.3-ஆம் தேதி திருநீா்மலை பெரிய ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதனையடுத்து, உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், தமிழக அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.

அப்போது, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் காமாட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சரண்யா, தாம்பரம் கோட்டாட்சியா் வெங்கடாசலம், பல்லாவரம் வட்டாட்சியா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.