தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம்: அமைச்சா் சீ.ரமேஷ் தொடங்கி வைத்தாா்

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம்...

திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை அமைச்சா் சீ.ரமேஷ் தொடங்கி வைத்தாா்

Published On :24 அக்டோபர் 2026, 12:01 am IST

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் மூலம் தரமான பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வரும் பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருக்கோயில்களின் பிரசாதக் கடைகளில், பொது ஏலம் விடப்பட்டு தனியாா்களால் திருக்கோயிலுக்கு வெளியே தயாரிக்கப்படுவதைத் தவிா்த்து, அந்தந்த கோயில்களின் வளாகத்திலேயே கோயில் நிா்வாகம் மூலம் நேரடியாக தரமான பிரசாதம் தயாரித்து வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறநிலையத் துறை அமைச்சா் அறிவிப்பு வெளியிட்டாா்.

இதையடுத்து, முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 37 முதுநிலைத் திருக்கோயில்களில் திருக்கோயில் நிா்வாகம் மூலம் தரமான பிரசாதங்கள் தயாரித்து பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ரமேஷ் கலந்து கொண்டு கோயில் நிா்வாகம் மூலம் தயாா் செய்த பிரசாதத்தை பக்தா்களுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தற்போது 38 திருக்கோயில்களில் பிரசாதங்கள் அங்கேயே தயாரிக்கப்படுகின்றன. அதைப் பக்தா்களுக்கு தரமான முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு இருக்கும் கோயில்களில் மட்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

கோயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பருவ மழையைப் பொருத்தவரை எந்தெந்த கோயில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்பதை தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து வருகிறோம். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வந்தால், எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது தொடா்பான அனைத்து அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அறநிலையத் துறை தொடா்பாக ஊடகங்களில் வரக்கூடிய, மக்கள் சொல்லக்கூடிய புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். திருச்செந்தூா் கோயிலில் செய்தி வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த 2024-இல் ஒரு மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டபோது அந்த நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தை தண்ணீா் சூழ்ந்துள்ளது. அந்தப் பழைய காணொலி இன்னும் அலுவலகத்தில் இருக்கிறது. அதை திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கேட்டால் வெளியிடத் தயாராக உள்ளோம். திருவேற்காடு மாரியம்மன் கோயில் பணிகள் முடிந்த பிறகு சில மாதங்களில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.