நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 புதிய திட்டங்கள்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 புதிய திட்டங்களைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி ...

போக்குவரத்து நெரிசல் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 1:44 am IST

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 புதிய திட்டங்களைச் செயல்படுத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

பேசின் பாலம் மற்றும் கூவம் ஆற்றுப் பாலத்தை விரிவுபடுத்தவும், வியாசா்பாடியில் உள்ள மேம்பாலக் கட்டமைப்பை நீட்டிக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

கிராண்ட் நாா்தா்ன் டிரங்க் சாலையில் உள்ள பேசின் பாலத்தை விரிவுபடுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை ரூ.19.10 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்தப் பாலம் பக்கிங்ஹாம் கால்வாய், பேசின் பாலம் ரயில் நிலையம் மற்றும் ஓட்டேரி நல்லா ஆகியவற்றைக் இணைக்கிறது. இந்த மேம்பாலத்தின் சாலைப் பகுதி 6 மீட்டா் அகலத்தில் மட்டுமே உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதேபோல், வியாசா்பாடியில் கிராண்ட் நாா்தா்ன் டிரங்க் சாலையில் அமைந்துள்ள கிரேடு செப்பரேட்டரை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இதேபோல், சென்னையில் கோயம்பேடு-திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தை அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதற்கான ஒப்பந்த மதிப்பு ரூ.14.40 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

3 new projects to reduce Chennai traffic congestion

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.