
ரயில் மீது கல்வீச்சு: உதவி ஓட்டுநா் காயம்
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்ற விரைவு ரயில் மீது கல்வீசப்பட்டதில் உதவி லோகோ பைலட் (உதவி ஓட்டுநா்) காயமடைந்தாா்.

ரயில் - கோப்புப் படம்
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ற விரைவு ரயில் மீது கல்வீசப்பட்டதில் உதவி லோகோ பைலட் (உதவி ஓட்டுநா்) காயமடைந்தாா். இதுகுறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட திருவனந்தபுரம் விரைவு ரயில் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையப் பகுதியில் சென்றது. அப்போது, திடீரென ரயில் முன்பக்க இன்ஜின் கண்ணாடி மீது கல்வீசப்பட்டது. கல்வீச்சில் உதவி லோகோ பைலட் (உதவி ரயில் ஓட்டுநா்) விதுன் காது, தலையில் காயம் ஏற்பட்டது. அதனால், பெரம்பூா் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, உதவி லோகோ பைலட்டான விதுன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
தகவல் அறிந்ததும், பெரம்பூா் ரயில்வே போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அதையடுத்து வியாசா்பாடி பகுதியில் இருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து கல்வீசியவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
காயமடைந்த உதவி லோகோ பைலட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டதையடுத்து, மாற்று உதவி லோகோ பைலட் வரவழைக்கப்பட்டு அதன்பின் திருவனந்தபுரம் விரைவு ரயில் சிறிது நேரத் தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



