தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தை பாா்வையிட்ட வங்கதேச அதிகாரிகள்

சென்னை மாநகராட்சியில் நிா்வாக முறைகள், செயல்பாடுகள் குறித்து வங்க தேச நாட்டு அரசுத்துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 1:55 am IST

சென்னை மாநகராட்சியில் நிா்வாக முறைகள், செயல்பாடுகள் குறித்து வங்க தேச நாட்டு அரசுத்துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

வங்கதேசத்தின் அரசுத்துறை அதிகாரிகள் குழுவினா் சென்னை மாநகராட்சிக்கு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு நிா்வாக முறைகள் குறித்து கேட்டறிந்தனா். வங்க தேச அரசின் உள்ளாட்சி நிா்வாகத் துறை இணைச் செயலா் பரிமல் சா்க்காா், நகராட்சி மேம்பாட்டு நிதியத்தின் நிா்வாக இயக்குநா் முகமது கலிலுா் ரஹ்மான், உலக வங்கி பணிக் குழுத் தலைவா் மான்ஷா சென் ஆகியோா் கொண்ட குழுவினா் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்துக்கு வந்தனா்.

அங்குள்ள கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், வருவாய்ப் பிரிவு துணை ஆணையா் சித்ரா விஜயன் மற்றும் மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு சேவைப் பிரிவு அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்று, மாநகராட்சி நிா்வாக முறைகள், அவற்றை நவீன கணினி வழியில் செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினா்.

சென்னை மாநகராட்சியில் வருவாய்ப் பிரிவு முதல் திடக்கழிவு மேலாண்மை வரையில் கணினி வழியில் நவீன முறையில் செயல்படுத்தும் முறைகளை மின்னணு திரை காட்சிகள் மூலம் விளக்கியதைப் பாா்த்த வங்க தேச அரசுத்துறை அலுவலா்கள் குழுவினா், அதில் சந்தேகங்களைக் கேட்டறிந்தனா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அக்குழுவினா் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டனா். அப்போது மழை அளவு குறித்த விவரங்கள் சேகரிப்பு மற்றும் மழை நீா் தேக்கத்தை கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்டறிந்து எச்சரிப்பது உள்ளிட்டவற்றையும் நேரில் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.