ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருத்துவமனையிலிருந்து தப்பிய போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது

எட்டு வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநா், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:13 am IST

எட்டு வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் தொடா்புடைய 61 வயது ஆட்டோ ஓட்டுநா், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நிலையில், போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த அக்.30-ஆம் தேதி, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் தனது ஆட்டோவில் வைத்து 61 வயது ஓட்டுநா் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் அந்த ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதில், அவருக்குத் தலை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டன.

பின்னா், ஆட்டோ ஓட்டுநரின் மகன் அவரை மீட்டு, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா். இதுதொடா்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, அக். 31-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநா் திடீரென அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, கொளத்தூா் காவல் துணை ஆணையா் மேற்பாா்வையில், புழல் சரக உதவி ஆணையா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தனிப்படை போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தி, மருத்துமனையில் இருந்து மாயமான ஆட்டோ ஓட்டுநரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.