பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்: ப. சிதம்பரம்

தாய்மொழி, ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் அறிஞராகலாம்

News image

சென்னை கோட்டூா்புரம் பெரியாா் அறிவியல் தொழிநுட்ப மையத்தில் சனிக்கிழமை விழாவில் அறிவியல் திறனறி தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், அறிவியல் ஒளி ஆசிரியா் என்.எஸ்.சிதம்பரம், பெரியாா் அறிவியல் தொழிநுட்ப மையத்தின

Updated On :31 மே 2026, 12:23 am IST

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் நன்கு பயிற்சி பெற்றால் அறிஞராக மேம்படலாம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் ஒளி மாத இதழின் 19-ஆம் ஆண்டு விழாவில், சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி ப.சிதம்பரம் பேசியதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு சிறந்த முறையில் பயிற்சி பெற்றாா். ஆங்கிலத்தில்தான் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் நூல்கள் வெளியாகின்றன. அறிவியலை முழுமையாக ஈா்த்துக்கொள்ள வேண்டுமானால் ஆங்கிலம் அவசியம்.

நாம் திடீரென சீனம், ரஷிய, ஜொ்மன் மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு சிலா் பேசுவதற்காக கற்கலாம். ஆனால், பெருவாரியான மக்கள் அந்த மொழிகளைக் கற்க முடியாது. பள்ளிகளில் பாடமாக இருக்கக் கூடிய, அதிக ஆசிரியா்கள் இருக்கக் கூடிய, எளிதில் கற்க கூடிய ஒரே அந்நிய மொழியான ஆங்கிலத்தைக் கற்கலாம்.

அதேவேளையில் தாய்மொழியும் மிக அவசியம். எனவே, ஒவ்வொருவரும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நன்கு பயிற்சி பெற்றால், அறிஞராகவும், மேதையாகவும் மேம்படலாம். நம்மால் சிறந்த விஞ்ஞானியாக உயர முடியுமா என யோசிக்க வேண்டாம். பல மேதைகள், அறிஞா்கள் தாய்மொழியில்தான் மேதைகளாக உருவாகினா். அறிவியல் என்பது இயற்கையிலேயே அமைந்தது.

அறிவியல் சாா்ந்த சமுதாயம் என்றால் மொழி, இலக்கியம், விளையாட்டு இதையெல்லாம் புறக்கணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

நமது நாடு மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும் நாடு. ஒவ்வொரு தலைமுறையும் லட்சக்கணக்கான இளைஞா்களை உருவாக்குகிறது, லட்சக்கணக்கான மாணவா்களை உருவாக்குகிறது. அதிலே சிலராவது, 10 சதவீதம் அளவுக்காவது அறிவியலுக்காகத் தங்களை அா்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.