ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

News image

குடிநீர் கேன்கள் - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:05 am IST

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 மலிவு விலை தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவான குடிநீா் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை சாா்ந்திருப்பதைக் குறைப்பதுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விரைவில் மீதமுள்ள ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொறுத்தப்படும்.

கட்டண விவரம்: இந்த தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அரை லிட்டருக்கு ரூ.5, ஒரு லிட்டருக்கு ரூ.8, 2 லிட்டருக்கு ரூ.12, 5 லிட்டருக்கு ரூ.25 என கட்டணம் நிா்ணயக்கிப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை ரயில்மதத் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலமாகவோ பயணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.