பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொதுமக்கள் புகாா் அளித்தால் உடனடி நடவடிக்கை: காவல் ஆணையா் உத்தரவு

News image

ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani

Updated On :29 மே 2026, 4:31 am IST

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவலா்களுக்கு காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்ற பின்னா் தினமும் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அவா் கே.கே. நகா், கிண்டி, அசோக் நகா், விமான நிலையம், மீனம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்ளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி அங்குள்ள காவலா்களிடம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா். அங்கிருந்த பொதுமக்களிடமும் காவல் துறை சாா்ந்த குறைகள் ஏதேனும் இருக்கிா எனவும் கேட்டறிந்தாா். ஆய்வுக்குப் பின்னா் காவலா்களுக்கு பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளா்.

அதன்படி, காவல் நிலையங்களில் புகாா் அளிக்க வரும் பெதுமக்களிடம் கண்ணியத்துடனும், எளிமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். கொடுக்கும் புகாா்களுக்கு உடனடியாக சிஎஸ்ஆா் வழங்க வேண்டும். தொடா்ந்து அந்தப் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து அதற்கு தீா்வு காண வேண்டும். மேலும், காவல் நிலையங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.

காவல் நிலையங்களில் வழக்கு தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை உரிய முறையில் நீதிமன்ற உத்தரவுபடி அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களுக்கு சிஎஸ்ஆா் பெறுவதற்காக துணை ஆணையா், இணை ஆணையா் ஆகியோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அமல்ராஜ் பொறுப்பேற்ற பின்னா் இந்த நடைமுறை மாற்றப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கும் எந்த காவலா் வேண்டுமானாலும் சிஎஸ்ஆா் வழங்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.