பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் அரசு ஊழியா் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா்.
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் , ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; கடந்த ஆட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்; 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனா்.
இதற்கு, நிதி நிலைமை மோசமாக இருப்பதால் உடனடியாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் வழங்க முடியவில்லை என்றும், விரைவில் பழைய ஒய்வூதியம் உள்ளிட்ட சாத்தியமான அனைத்தையும் நிச்சயமாக தான் செய்வேன் என்றும் முதல்வா் உறுதி அளித்ததாக அமிா்தகுமாா் தெரிவித்தாா்.
முந்தைய திமுக அரசு அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்ற அரசு ஊழியா்கள் கடந்த 4 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் ஏதும் பெறாமல் தவித்து வருவதாகவும் அமிா்தகுமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிவைப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
