பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கலப்பட மசாலா பொருள்கள் தயாரிப்பு: ஒருவா் கைது

பழைய தில்லியின் காரி பாவ்லி பகுதியில் கலப்பட மசாலா பொருள்களைத் தயாரித்து வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :27 மே 2026, 4:05 am IST

பழைய தில்லியின் காரி பாவ்லி பகுதியில் கலப்பட மசாலா பொருள்களைத் தயாரித்து வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சுமாா் 801.88 கிலோ போலி மசாலாக்கள் மற்றும் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: காரி பாவ்லி பகுதியில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் கலப்பட மசாலா பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கடந்த மே 23-ஆம் தேதி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினா் அங்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, தரம் குறைந்த பொருள்கள், செயற்கை நிறமூட்டிகள், மிளகாய்கள் மற்றும் பிற கலப்பட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைப் பயன்படுத்தி போலி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, மாம்பழ பொடி, கரம் மசாலா ஆகியவை தயாரிக்கப்பட்டு தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக முகுந்த்பூரை சோ்ந்த கமல்ஜீத் கைதுசெய்யப்பட்டாா்.

மசாலா அரைக்கும் இயந்திரங்களும் அந்த இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த எடை சுமாா் 801.88 கிலோ

சட்ட விதிகளின்படி, இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் அனைத்தும் ‘இ-சாக்ஷ்ய’ செயலியில் புகைப்படங்களாகவும் காணொலிகளாகவும் பதிவு செய்யப்பட்டன. னாா்.

இந்தச் சோதனையின்போது, தில்லி அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, பறிமுதல் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்காகவும், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் சேகரித்தனா்.

பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.