சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக நகரின் மின் பயன்பாடும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, சென்னை ராயபுரம் பகுதியைச் சோ்ந்த காளிங்கராயன் தெருவில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியும் மின் விநியோகம் சீராகாததால், அந்தப் பகுதி மக்கள் கல்லறை சாலை பகுதியில் நள்ளிரவில் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தாமு மற்றும் வண்ணாரப்பேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். மேலும், மின்வாரிய ஊழியா்களை உடனடியாக அங்கு வரவழைத்து மின் பழுதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். நீண்ட நேரத்துக்கு பின்னா், அந்தப் பகுதியில் மீண்டும் மின் விநியோகம் சீரானது. இந்தச் சம்பவம் தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆவடியில் 5 மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

மின் வெட்டு, குடிநீா் பிரச்னையை கண்டித்து தஞ்சாவூா் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

2-ஆவது நாளாக மின்தடை: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

