குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுவது குறித்து முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் பேரவையில் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வா் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். அதை வரவேற்கிறேன். முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் சிறப்புக் காவல் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது மக்களால் வரவேற்கப்பட்டது. மீனவா்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.
தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சி என முதல்வா் விஜய் பதவியேற்கும்போது கூறினாா். ஆனால், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு வந்தவா் யாா் என்று பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. இது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்வா் பேச வேண்டும்.
முதல்வரின் அரசியல் பிரிவில் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது ஏற்புடையதல்ல. இளைஞா்கள் நம்பிக்கையில் வாக்களித்து இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைப்பட்டால் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.
முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு விசிக, இடதுசாரிகள், மஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்களும் பேரவையில் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசு மீது கோபத்தில் மக்கள்! முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பிரேமலதா

அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: இபிஎஸ் விமர்சனம்

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

தவெகவில் குதிரை பேரம்; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

