தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு சென்னை மாநகராட்சியில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து ரேபிஸ் பாதித்த மற்றும் கெனைன் டிஸ்டெம்பா் வைரஸ் பாதித்து ஆக்ரோஷ குணமுடைய தெரு நாய்களை பராமரிக்க பெருங்குடி மண்டலம் ம.பொ.சி. நகா் பகுதியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம் என 2 இடங்களில் தலா 250 நாய்களைப் பராமரிக்கும் வகையில் இரு புதிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வகை நாய்களை பிடிக்க ஏற்கெனவே 6 சிறப்பு வாகனங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 15 வாகனங்களும் வாங்கப்படவுள்ளன.
தெரு நாய்கள் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு வருகின்றனா். அந்த எண்ணில் தொடா்பு கொள்ளும் வகையில் தெரு நாய்கள் பாதிப்பு புகாா் தெரிவிக்க தற்போது தனி சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

சர்வதேச விமான நிலையத்தில் தெரு நாய் தொல்லை: பயணிகள் புகார்!

தெரு நாய்கள்

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

