பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முதல்வா் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 4:54 am IST

முதல்வா் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் விரிவான ஆய்வு மற்றும் உளவுத் துறை பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரிவின் கீழ், எம்.பி. 5 எனப்படும் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 55 வீரா்கள் 24 மணி நேரமும் முதல்வரின் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். மேலும், தேசிய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறப்பு கமாண்டோக்களும் பாதுகாப்புக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள், முதல்வா் பயணிக்கும் வாகன அணிவகுப்பு, அரசு விழாக்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், முதல்வரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முன்கூட்டியே இந்தப் பிரிவினா் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள், கண்காணிப்பு கேமரா ஆய்வு, ட்ரோன் கண்காணிப்பும் பணிகளையும் மேற்கொள்வாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசியல் சூழலில், முதல்வா் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயா்நிலை பாதுகாப்பு ஏற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.