அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை மறுத்து மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், வீ தி லீடர்ஸ் என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய அவர், புதிய கட்சியையும் தொடங்கவிருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு உயரடுக்கு பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உளவுத்துறை அளிக்கும் அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில் இசட் பாதுகாப்பு வழங்குவது முடிவு செய்யப்படுகிறது.
பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி வகித்தபோது, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன்படி, அண்ணாமலை பாதுகாப்புக்காகச் சுமார் 36-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள், சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தொடர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், பாஜகவிலிருந்து விலகியதால், தனக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Did Annamalai return his Z+ category security?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!

இயக்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி: அண்ணாமலை
24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள்! நன்றி தெரிவித்த அண்ணாமலை!

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


