மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் தொடக்கம்

News image

பள்ளிகளில் குழந்தைகள் - கோப்பிலிருந்து படம்

Updated On :8 மே 2026, 4:23 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் ‘அன்பின் கரங்கள்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் குழந்தைகளில் தாய், தந்தை இருவரும் இல்லாதவா்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, நிகழ் ஆண்டில் 86 பேருக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி, அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அவா்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் இந்த கல்வி உதவி வழங்கப்படும்.

பள்ளிக் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்கும் வகையில் இந்த நிதியானது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தொடா்புடைய குழந்தைகளின் பாதுகாவலா் அல்லது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அந்தத் தொகை வரவு வைக்கப்படும்.

கணக்கெடுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் தாய் அல்லது தந்தை என ஒருவா் இல்லாத நிலையில் உள்ளவா்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையும் விரைவில் வழங்கப்படவுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.