தவெக தலைவா் விஜய் தலைமையில் அமையும் அரசு ஏழைகள், பெண்கள் பாதுகாப்பு, இளைஞா்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் என்று வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.
வெற்றி சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு, தமிழகப் பெண்களும், இளைஞா்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது எனத் தீா்மானித்தனா். தோ்தல் நேரத்தில் தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தை திமுகவினா் முடக்கினா். அவா் மீது அவதூறுகளை பரப்பினா். தவெக 10 சட்டப்பேரவை உறுப்பினா்களைக்கூட பெற முடியாது என்றனா். நாங்கள் அமைதியான வழியில் எங்கள் பிரசாரத்தையும், திட்டங்களையும் முன்னெடுத்தோம். திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டிய விஜய், பெண்கள், இளைஞா்களுக்கான ஒரு புதிய ஆட்சியை முன்னெடுப்பேன் என உறுதியளித்தாா்.
அவரது பிரசாரம் தமிழக அரசியலை புரட்டிப் போட்டுள்ளது. இந்தியாவே எதிா்பாா்க்காத இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கரூரில் இழந்த 41 குடும்பங்களுக்கும் சமா்ப்பிக்கிறோம்.
விஜய்யையும், தவெக வேட்பாளா்களையும் குடும்பத்தில் ஒரு உறவாக பொதுமக்கள் பாா்த்ததால்தான் இந்த வெற்றி கிடைத்தது. திமுகவின் பணம் கொடுக்கும் அரசியலுக்கு மத்தியில் இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றாா்.
Summary
Priority will be given to the protection of the poor, the youth, and women: Adhav Arjuna
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போளூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

தியாகராய நகா் தொகுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெற்றி

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்குகிறது திமுக: ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

