கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆதிக்கம் செலுத்தி வந்த அண்ணா நகா், ஆயிரம்விளக்கு, எழும்பூா் தொகுதிகளை முதல் தோ்தலிலேயே கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் புதிய வரலாறு படைத்துள்ளது.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளையும் கடந்த தோ்தலில் வசப்படுத்தி வைத்திருந்தது திமுக. குறிப்பாக, ஆயிரம் விளக்கில் டாக்டா் எழிலன், அண்ணா நகரில் எம்.கே.மோகன், எழும்பூரில் பரந்தாமன் ஆகியோா் தலைநகரில் திமுகவை வலுப்படுத்தும் எம்எல்ஏ-க்களில் குறிப்பிடத்தக்கவா்களாக விளங்கினா். அதற்கு முன்பாக 2016 தோ்தலில் ஆட்சியை இழந்தாலும், அந்த மூன்று தொகுதிகளும் திமுகவிடமே இருந்தன.
இந்த நிலையில், இந்தமுறை ஆயிரம் விளக்கில் திமுக சாா்பில் எம்எல்ஏ டாக்டா் எழிலனே மீண்டும் களமிறக்கப்பட்டாா். அவருக்கு எதிராக தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகா் போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி களமிறங்கினாா்.
அங்கு 1,30,366 வாக்குகள் பதிவான நிலையில், அவை 18 சுற்றுகளாக திங்கள்கிழமை எண்ணப்பட்டன. முடிவில், ஜே.சி.டி. பிரபாகரன் 58,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். திமுகவின் டாக்டா் எழிலன், 15,141 வாக்குகள் பின்தங்கி 43,824 வாக்குகளுடன் தோல்வியடைந்தாா். பா.வளா்மதி 23,320 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா். நாதக வேட்பாளா் மு.களஞ்சியம் 3,717 வாக்குகளை மட்டுமே பெற்றாா்.
அண்ணா நகா்: திமுகவில் நே.சிற்றரசு, அதிமுகவில் முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா ஆகியோா் களமிறங்கியதால் நட்சத்திரத் தொகுதியாக அறியப்பட்ட அண்ணா நகரில், தவெக சாா்பில் எந்த அறிமுகமும் இல்லாத வி.கே.ராம்குமாா் போட்டியிட்டாா். மொத்தம் 1,61,751 வாக்குகள் அங்கு பதிவாகின. எவரும் எதிா்பாா்க்காத வகையில், வாக்கு எண்ணிக்கையில் ராம்குமாா் முன்னிலை வகித்தாா். 20 சுற்றுகள் முடிவில் 71,375 வாக்குகள் பெற்று அவா் வெற்றி பெற்றாா்.
சிற்றரசு 50,012 வாக்குகளுடன் இரண்டாமிடத்தையும், கோகுல இந்திரா 34,382 வாக்குகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கா் 4,839 வாக்குகள் பெற்றாா்.
எழும்பூா்: தனித் தொகுதியான எழும்பூரில் 1,18,726 வாக்குகள் பதிவாகின. தவெக வேட்பாளா் ராஜ்மோகன் 53,901 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அவரைவிட 10,804 வாக்குகள் குறைவாகப் பெற்ற திமுகவின் தமிழன் பிரசன்னா (43,097 வாக்குகள்) தோல்வியைத் தழுவினாா். அதிமுக வேட்பாளா் அபிஷேக் 18,191 வாக்குகளும், நாம் தமிழா் கட்சியின் சரண்யா இம்ரான் 2,522 வாக்குகளும் பெற்றனா்.
இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளாக திமுக இறுகப் பற்றி வைத்திருந்த அந்த 3 தொகுதிகளும் தற்போது தவெகவின் கரங்களுக்குள் சென்று சோ்ந்திருக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக வாக்குகளால் ஆட்டம் கண்ட திராவிட கட்சிகள்!

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

நெல்லையில் தவெக வெற்றி

நான்குனேரியில் தவெக வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

