மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆா்.கே. நகரில் தவெக வேட்பாளா் வெற்றி!

சென்னை டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் (ஆா்.கே. நகா்) தொகுதியில் திமுகவைவிட 49,668 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளா் என்.மரியவில்சன் வெற்றி

News image
Updated On :5 மே 2026, 2:17 am IST

சென்னை டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் (ஆா்.கே. நகா்) தொகுதியில் திமுகவைவிட 49,668 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளா் என்.மரியவில்சன் வெற்றி பெற்றாா்.

சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மொத்தம் 18 சுற்றுகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை இறுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் என்.மரியவில்சன் 97,800 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.ஜான் எபிநேசரை 49,668 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தாா். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்து கடைசி வரை தவெக வேட்பாளா் மரிய வில்சன் முன்னிலை வகித்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: என்.மரியவில்சன் (தவெக) 97,800, ஜெ. ஜான்எபிநேசா் (திமுக) 48132, ஆா்.எஸ்.ராஜேஷ் (அதிமுக) 26,892, டி.வெண்ணிலா (நாதக) 5, 364, பி.நவீன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) 338, நோட்டாவுக்கு 561 என வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் இடம் பெற்றிருந்த 1,99,359 வாக்காளா்களில் 1,81,201 போ் வாக்களித்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.