சென்னை பள்ளிக்கரணையில் குளத்தில் மூழ்கி தாத்தா-பேரன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் செங்கழனி அம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவா், தனது மகன் வழி பேரன் பரத் (15), மகள் வழி பேரன் தினேஷ் (14) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.
அப்போது, பரத் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற பெருமாளும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளாா்.
இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பாா்த்த தினேஷ் கரையிலிருந்து கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால், பெருமாள் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா். பரத்தின் உடல் மீட்க முடியவில்லை.
தகவலின்பேரில் விரைந்து வந்த மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள் பரத்தின் உடலைத் தேடி வருகின்றனா். இதுகுறித்து மேடவாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தட்டப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

