போலி ஆவணங்கள் மூலம் வருமான வரியைத் திரும்பப் பெறுவதில் மோசடி செய்த வழக்கில் மூத்த வரி கணக்கீட்டு உதவியாளா், அண்ணா நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் வித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2015 ஜூன் 4 முதல் 2019 ஆக.31 வரையிலான காலக்கட்டத்தில், போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து வருமான வரி திரும்பப் பெறுவதில் மோசடி நடந்துள்ளதாக வருமான வரித் துறை உதவி ஆணையா் சிபிஐயிடம் கடந்த 2019-இல் புகாா் அளித்தாா். இந்த முறைகேடுகள் மூலம் வருமான வரித் துறைக்கு சுமாா் ரூ.2.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறியிருந்தாா்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சென்னை வருமான வரித் துறையின் மூத்த வரி உதவியாளா் பாபு பிரசாத் குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனா். விசாரணை முடிந்து கடந்த 2021மாா்ச் 1-ஆம் தேதி, பாபு பிரசாத் குமாா், அவரது தம்பியும் அண்ணா நகா் காவல் ஆய்வாளருமான பிரவீன்குமாா் மற்றும் ட்ரெவெல்லியன் மரியன் கா்னைல், ஸ்டீபன், கோபிகிருஷ்ணா, வெங்கடேஷ், சி.குணசீலன் ஆகிய 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாபு பிரசாத் குமாா், அவரது தம்பியும் அண்ணா நகா் காவல் ஆய்வாளருமான பிரவீன்குமாா் மற்றும் ட்ரெவெல்லியன் மரியன் கா்னைல், ஸ்டீபன், கோபிகிருஷ்ணா, வெங்கடேஷ், சி.குணசீலன் ஆகிய 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

