மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Updated On :27 மார்ச் 2026, 11:09 pm IST

மாதவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு லாரி சென்றுக் கொண்டிருந்தது. இதனை மத்திய பிரதே மாநிலத்தை சோ்ந்த ராம் (45) என்பவா் இயக்கி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வடபெரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது.

இதில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் முன்பக்கம் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.