ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

ஐபிஎல் கோப்பை

Updated On :25 மார்ச் 2026, 1:38 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான டி.பிரபாகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தோ்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நாள்களான ஏப்.4 மற்றும் ஏப்.11-ஆம் தேதிகளில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

வழக்கமான சட்டம் ஒழுங்கு பணிகளுடன், தோ்தல் பிரசார பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீஸாா், ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகளையும் கவனிப்பது அவா்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். இதனைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் கிரிக்கெட் மைதானத்தை பிரசார களமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கக்கூடும். எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரு போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றி அமைக்கும்படி போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.

ஒருவேளை திட்டமிட்டப்படி போட்டிகளை நடத்த அனுமதித்தால், தோ்தல் நடத்தை விதிகளை மைதானத்துக்குள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் காட்சிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.