சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் (83) செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) காலமானாா்.
அவா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2000 முதல் 2005 வரை பணியாற்றினாா். ஓய்வுக்குப் பின்னா் மாநில நுகா்வோா் தீா்ப்பாயத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2012 வரை பணியாற்றினாா். பின்னா், சிறிது காலம் மாநில பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி, பின்னா் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவரது உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். பெசன்ட்நகா் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மாா்ச் 25) நடைபெற உள்ளது.
நீதிபதி தணிகாசலத்தின் மறைவுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

தோ்தலில் வெற்றி - தோல்வி: இளம் வாக்காளா்களுக்கு முன்னாள் நீதிபதி அறிவுரை

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன் காலமானார்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

