தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்

சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்கள், மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்துகளை வாங்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

News image

மாநகா் போக்குவரத்துக் கழகம்

Updated On :24 மார்ச் 2026, 2:07 am IST

சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்கள், மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்துகளை வாங்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தினமும் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்தப் பேருந்துகளில், 34 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், மின்சார ரயில், மெட்ரோ, பேருந்து நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில், போதிய அளவில் இணைப்பு பேருந்துகள் இல்லை.

இதனால், பயணிகள் தங்கள் பயணத்துக்காக கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக தனியாா் பங்களிப்போடு, 300 குளிா்சாதன வசதி கொண்ட இணைப்பு சிற்றுந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. தற்போது, இதற்காக ஒப்பந்தத்தை மாநகா் போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில், இணைப்பு வாகன சேவை மிகவும் முக்கியமானது. இதற்காக 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிற்றுந்துகளின் இயக்கம், பராமரிப்பு, அதற்கான மின்சாரம், உள் கட்டமைப்பு பணிகளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே ஏற்கும். ஒவ்வொரு பேருந்துகளையும் மாதத்துக்கு 4,800 கி.மீ. கட்டாயம் இயக்க வேண்டும். இந்த புதிய பேருந்துகளில், பயணிகளிடம் எவ்வித கூடுதல கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.