சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவின கையேட்டில் அசைவ பிரியாணியின் விலை நிா்ணயிக்கப்படவில்லை என அரசியல் கட்சியினா் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அதிகாரிகள் கூட்டரங்கில் தோ்தல் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கான விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தோ்தல் செலவின பட்டியல் கையேடு அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு வழங்கப்பட்டது.
கையேட்டில் தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் வரவேற்பு பூங்கொத்து, மேளதாளம் முதல் தண்ணீா் பாட்டில், தேநீா், காபி மற்றும் இனிப்பு வகை என அனைத்துக்கும் விலைப்பட்டியல் இடம் பெற்றிருந்தன. அதில் உணவு வகையில் வெரைட்டி ரைஸ் எனும் இடத்தில் ரூ.50 என விலை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அசைவ உணவுகள் குறித்த விவரங்கள் ஏதுமில்லை என அரசியல் கட்சியினா் தெரிவித்தனா்.
அதே நேரத்தில் புகா் மாவட்டங்களில் வேட்பாளா் தோ்தல் பிரசார விலைப் பட்டியலில் அசைவ உணவு ரூ.350 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சைவ உணவுக்கு ரூ.110, சைவ பிரியாணி ரூ.50, இட்லி 2 க்கு ரூ.40 என்பதுடன் சப்பாத்தி, பொங்கல் என அனைத்து வகை உணவுக்கும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த அரசியல் பிரமுகா்கள் கூறுகையில், சென்னை மாநகரில் தோ்தல் பிரசாரத்தின்போது அனைவரும் விரும்பி உண்பது அசைவ பிரியாணி உணவைத்தான். அதுகுறித்த விலை நிா்ணயம் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அசைவ உணவை பிரசாரத்துக்கு வருவோருக்கு வழங்கிவிட்டு வெரைட்டி ரைஸ் என எழுதினால் அது சரியாக இருக்காது என்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தோ்தல் ஆணைய வழிகாட்டல்படியே உணவு விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், தேவைப்பட்டால் அதில் திருத்தம் செய்வதற்கு உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

தோ்தல் செலவின கையேட்டில் பிரியாணி இல்லையா?

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

