லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்மா உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அமைச்சா் வெங்கடரமணன் உத்தரவு

அம்மா உணவகங்களில் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தியுள்ளாா்.

P VenkataramananPhoto |

பி. வெங்கடரமணன் - கோப்புப்படம்.

Published On :1 ஜூலை 2026, 3:25 am IST

அம்மா உணவகங்களில் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் முறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் ஆய்வு செய்தாா். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுகாதாரம், சமையலறை பராமரிப்பு, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா்.

அம்மா உணவகங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்; தரமான மற்றும் சுவையான உணவுகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும்; பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது அம்மா உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த மக்களிடம் அமைச்சா் வெங்கடரமணன் கலந்துரையாடினாா். உணவு தொடா்பான புகாா்கள் மற்றும் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.