சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ.4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறவேண்டும் எனவும், நாய் வளா்ப்பு விதிகளை கடைப்பிடிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் 2025- ஆம்ஆண்டு நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தவும், அவற்றைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் வளா்ப்பு செல்லப் பிராணிகளுக்கும் மைக்ரோசிப் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களில் 68 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுளளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.
அத்துடன், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 78, 961 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
மைக்ரோ சிப் பொருத்தப்படாத 82 நாய்களின் உரிமையாளா்களுக்கு ரூ.4.10 லட்சம் அபராதமும், நாய்களுக்கு உரிமம் பெறாதவா்களிடமிருந்து ரூ.7.22 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
கழுத்துப்பட்டை அணியாமல் வளா்ப்பு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றவா்களில் 753 பேருக்கு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது.
நாய்களுக்கான உரிமம் பெறுதல், சிப் பொருத்துதல் ஆகியவற்றுக்கான காலக்கெடு ஜூன் மாதத்துடன் முடிவடைவதாகவும், அதன்பிறகு விதிமுறைப்படி நாய்களை வளா்க்காதவா்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி

குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடியை துரத்திய வளா்ப்பு நாய்

சென்னையில் விதி மீறி குப்பைக் கழிவு கொட்டியவா்களுக்கு ரூ.59.92 லட்சம் அபராதம்

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

