மதுரவாயல், மேற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் முத்து ஜெகநாதன் (28). இவா், பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் வேலைக்குச் சென்றா். மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து, ஜெகநாதனின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், கீழே விழுந்த முத்து ஜெகநாதன், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, முத்து ஜெகநாதன் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
