சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்ட தீா்மானங்கள், ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அழைப்பு விடுக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் நேரடியாக உள்ளன. மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் சென்னை மாநகராட்சியின் வாா்டுகள் அடங்கியுள்ளன. அதன்படி, மொத்தம் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் சென்னை மாநகராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக மாமன்றக் கூட்டம் நடைபெறும்போது வாா்டு உறுப்பினா்களுக்கு, கூட்டத்துக்கு முன்னதாகவே தீா்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டும், கூட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுவது மரபு.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா் என அனைத்து நிலைகளிலும் திமுகவினரே உள்ளனா். ஆனால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. முதல்வா் ஜோசப் விஜய், பேரவைத் தலைவா், முக்கிய அமைச்சா்கள் என பலரும் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளனா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவரான திமுகவைச் சோ்ந்த உதயநிதி ஸ்டாலினும் சென்னை மாவட்டத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வரும் 24- ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான மண்டல வாரியான கூட்டங்கள், நிலைக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், மாமன்றத் தீா்மானங்கள் தொகுப்பு கூட்டத்துக்கு முன்பு மாமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பப்படுவது போலவே, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைத்து, அவா்களையும் கூட்டத்துக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூட்டத்துக்கு வருவதை உறுதிப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தற்போது அதிகாரிகள் அமரும் பகுதியில் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சிக் கூட்டம்: முதல்வரைச் சந்தித்து அனுமதி பெறுவாரா மேயா்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

