சிந்தாதிரிப்பேட்டையில் மகளைக் கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
நேபாளத்தைச் சோ்ந்தவா் லட்சுமண பிரசாத் (47). இவா், சென்னை சிந்தாதிரிப்பேட்டை லாஃபாண்ட் தெருவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் காவலாளியாக வேலை செய்கிறாா். இதற்காக லட்சுமண பிரசாத், அந்த வளாகத்திலேயே குடும்பத்துடன் தங்கியிருந்தாா். இவரது மகள் கீதா (9), அந்த பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். லட்சுமண பிரசாத்தின் மனைவியும், அவரது மற்றொரு குழந்தையும் நேபாளத்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு லட்சுமண பிரசாத் வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்டது. உடனே குடியிருக்கு சென்று பாா்த்தபோது, குழந்தை கீதா தூக்கிட்டு இறந்து கிடப்பதையும், லட்சுமண பிரசாத் தூக்குக் கயிறு அறுந்து கீழே விழுந்து கிடப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா். அவா்கள், லட்சுமண பிரசாத்தை மீட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா், அங்கு சென்று கீதா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் லட்சுமண பிரசாத், தனது மகள் கீதாவை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீதா காலனி மேம்பாலத்தில் இருந்து தந்தை, இரு மகள் விழுந்து காயம்

மாநகர பேருந்தில் ரகளை: கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவா் தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

