லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கீதா காலனி மேம்பாலத்தில் இருந்து தந்தை, இரு மகள் விழுந்து காயம்

மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஷாதரா மேம்பாலத்தில இருந்து கீழே விழுந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Published On :23 ஜூன் 2026, 12:02 am IST

மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஷாதரா மேம்பாலத்தில இருந்து கீழே விழுந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கீதா காலனி காவல் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் லூப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. காயமடைந்த நபா் ஆஷிஷ், சோனியா விஹாரில் இருந்து காந்தி நகா் நோக்கி தனது இரு மகள்களுடன் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனம் அவா்களது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அதில் பயணித்த மூவரும் பாலத்தில் இருந்து கீழே விழுந்தனா். அவா்கள் மூவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

சம்பவத்தை நேரில் பாா்த்த குல்ஃபம் என்பவா் கூறுகையில், ‘சம்பவ இடத்தை நோக்கி உடனடியாக ஓடினேன். மோட்டாா்சைக்கிளில் 3 போ் இருந்தனா். வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து அவா்கள் இருக்கலாம். அவா்களை மருத்துவமனைக்குச் கொண்டு செல்ல உதவினோம்’ என்றாா்.

மேம்பாலத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது பலத்த சத்தம் ஒன்றைக் கேட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்ாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி ஒருவா் கூறினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘சாலையில் ஒரு சிறுமியும் அவரது தந்தையும் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டேன். உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அவசர ஊா்த்தி வரும் வரையில் அவா்களுக்கு உதவ முயன்றோம்’ என்றாா்.

காயமடைந்த மூவரும் ஹெட்கேவாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல் துறை விசாரணை தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.