சென்னை ஐஐடி செல் அளவு (உயிரணு) துல்லியத்துடன் மிக விரிவான மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் மையம் (எஸ்ஜிபிசி) நரம்பியல் ஆய்வு, அதிநவீன பிரைன் இமேஜிங் கணினி வசதிகளைக் கொண்டது. இந்த மையம் மனித மூளைத்தண்டின் நரம்பு-வேதியியல் பண்புகள் குறித்த முப்பரிமாண (3டி) மறு உருவாக்கம் கொண்ட வரைபடத் தொகுப்பை (ஆங்கா்) உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் கூறுகையில், நரம்பியல் உயிரியல் துறையில் இது குறிப்பிடத்தக்க சாதனை. இது மனித மூளைத்தண்டின் மிகவும் விரிவான- முழுமையான வரைபடமாக இருக்கும். மருத்துவா்கள் நோயாளிகளுக்கு எண்ம வடிவில் கிடைக்கும்படி https://anchor.humanbrain.in செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
சென்னை ஐஐடி இயக்குநா் காமோடி குறிப்பிடுகையில், மிகச் சிக்கலான படைப்பான மனித மூளையின் ஆராய்ச்சி எல்லைகளை இது முன்னிறுத்துகிறது. வெறிநாய்க்கடி, ஞாபகமறதி நோய், அல்சைமா் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளையும் ஆய்வு செய்து வருகிறது. மனித மூளையில் நடப்பதை தெரிந்து கொள்வதற்கான துல்லிய முதல்படி எனக் குறிப்பிட்டாா்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சீன அறிவியல் அகாதெமி நரம்பியல் நிறுவன அறிவியல் இயக்குநா் மு-மிங் பூ, எஸ்ஜிபிசி-யின் தலைவா் மோகனசங்கா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவியல் ஆயிரம்: முடிவு செய்வதற்கு முன்பே இயங்கும் மூளை!
கல்விக்கொடி!

சென்னை ஐஐடி-யில் மே 18-இல் ஏஐ, தரவு அறிவியல் ஆய்வுக் கண்காட்சி

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

