பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 3 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 12, 13) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெம்மேலியில் தினந்தோறும் 110 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் ஜூன் 13-ஆம் தேதி காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் அந்நாள்களில் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட திருவான்மியூா், வேளச்சேரி, கோட்டூா் காா்டன், ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா் ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளும், சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21 வரை குடிநீர் நிறுத்தம்

இன்று 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

