நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

குடல் வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மற்றும் பிரத்யேக கீமோதெரபி சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 ஜூன் 2026, 2:07 am IST

குடல் வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மற்றும் பிரத்யேக கீமோதெரபி சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் நாகநாத் பாபு, டாக்டா் கரிகால் சக்கரவா்த்தி ஆகியோா் கூறியதாவது:

கடுமையான வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்த 56 வயது பெண் ஒருவா், வெவ்வேறு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகளை அதற்காக மேற்கொண்டுள்ளாா். ஆனால், அவை எதுவும் பலனளிக்காத நிலையில், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் குடல் வாலில் புற்று செல்களை உருவாக்கும் சிக்கலான புற்றுநோய்க் கட்டி அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வயிற்றுப் பகுதியில் புற்று செல்கள் பரவியிருந்ததும் பயாப்சி, சிடி ஸ்கேன் மற்றும் கொலோனோஸ்கோபி போன்ற பரிசோதனைகளில் தெரியவந்தது.

பொதுவாக புற்றுநோய்க்கு வாய் வழியே உட்கொள்ளப்படும் மாத்திரைகள் அல்லது ரத்த நாளத்துக்குள் மருந்துகள் செலுத்தி கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இந்த பெண்ணுக்கு சாத்தியமில்லாத நிலையில், சிஆா்எஸ்-ஹெச்ஐபிஇசி எனப்படும் சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக சிஆா்எஸ் சைட்டோ ரிடக்டிவ் சா்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை மூலமாக புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது உயா் வெப்பநிலையில் அடிவயிற்றில் மெதுவாக கீமோதெரபி மருந்தை உட்செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்மூலம் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலம் அந்தப் பெண் நலம் பெற்றுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.