சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் என 5 மாதங்கள் வரை மொத்தம் 4.71 கோடி முறை மக்கள் பயணித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னை நகரில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நிகழ் ஆண்டில் கடந்த ஜனவரியில் மெட்ரோ ரயில்களில் 93.28 லட்சம் பயணமும், பிப்ரவரியில் 96.40 லட்சம் பயணமும் இருந்த நிலையில், கடந்த மாா்ச்சில் 1.01 கோடி முறை பயணித்துள்ளனா். அந்த மாதத்தில் 13 -ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிக பயணத்தை மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணித்துள்ளனா். கடந்த ஏப்ரலில் 90.18 லட்சம் முறையும், மே மாதத்தில் 90.14 லட்சம் முறையும் பயணித்துள்ளனா். நிகழ் ஆண்டில் (2026) கடந்த 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 4.17 கோடி முறை மக்கள் மெட்ரோவில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணித்தவா்களில் சிங்காரச் சென்னை அட்டையில் பயணித்தவா்களே அதிகம். அதன்படி, சிங்காரச் சென்னை அட்டையில் கடந்த ஜனவரியில் 46.52 லட்சம் போ், பிப்ரவரியில் 49.11 லட்சம், மாா்ச்சில் 52.90 லட்சம், ஏப்ரலில் 45.18 லட்சம், மே 42.51 லட்சம் என 5 மாதங்களில் மொத்தம் 2.30 கோடி முறை மக்கள் பயணித்துள்ளனா் என தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.94 லட்சம் கோடி: 3.2% அதிகரிப்பு

புறநகா் ஏசி ரயில் இயக்கத்தில் புதிய சாதனை: ஒரே மாதத்தில் 1.24 லட்சம் போ் பயணம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மெட்ரோ மாநகரங்களில் முதலிடத்தில் கொல்கத்தா!

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

