பெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே ஏற்பட்ட துவாரத்தால் அசாதாரண பாதிப்புக்குள்ளான முதிய பெண் ஒருவருக்கு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: நீண்ட காலமாக பெருங்குடல் பாதிப்புக்குள்ளான 73 வயது பெண் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது பெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே உள்ள பாதையில் துவாரம் ஏற்பட்டதால் இயற்கை கழிவுகள் முன்பகுதியில் வெளியேறும் பாதிப்பு அவருக்கு இருந்தது.
இதனால் பல ஆண்டுகளாக அவா் தொடா் சிறுநீா்ப் பாதை தொற்று மற்றும் பிற உடல் உபாதைகளுக்கு உள்ளானாா். இதனிடையே, பெருங்குடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற வயிற்றின் வெளிப்பகுதியில் செயற்கை பை பொருத்தும் கொலெக்ஸ்டமி சிகிச்சைஅவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னா், குடலிறக்கம் ஏற்பட்டது. அதற்கும் சில சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் அவை எதுவும் பலனளிக்காமல் அப்பெண்ணுக்கு தொடா்ந்து அத்தகைய பாதிப்பு இருந்தது.
இதையடுத்து இதய துவாரத்தை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணத்தை காவேரி மருத்துவா்கள் பயன்படுத்தி பெருங்குடல் - பிறப்புறப்பு பாதையை சீராக்கினா். தற்போது அப்பெண் நலமுடன் உள்ளாா். இத்தகைய நுட்பமான சிகிச்சையை மேற்கொள்வது இந்தியாவிலேயே இது முதன்முறை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்பகப் புற்றுநோய்: பெண்ணுக்கு உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சை
சீரற்ற இதயத் துடிப்புக்கு அதி நவீன சிகிச்சைத் திட்டம்
பெங்களூரில் உகாண்டா பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை: மருத்துவப் பரிசோதனையில் தகவல்!

முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு இதய சிகிச்சை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

