லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொக்லைன் இயந்திரம் மோதி ஒருவா் உயிரிழப்பு: உரிமையாளா் கைது

பொக்லைன் இயந்திரம் மோதி ஒருவா் உயிரிழந்தது பற்றி...

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 3:09 am IST

திருவல்லிக்கேணியில் பொக்லைன் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், இறைச்சிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பொக்லைன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பூரைச் சோ்ந்த முகமது ஷேக் ஆசிப் (28), நண்பரான தேவாராஜ் முதலித் தெருவைச் சோ்ந்த தினேஷ் (22) என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி இரவு காமராஜா் சாலை தொழிலாளா் சிலை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த பொக்லைன் வாகனம் திடீரென திரும்பியதில் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு, ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, முகமது ஷேக் ஆசிப், சனிக்கிழமை உயிரிழந்தாா். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்தி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய பொக்லைன் வாகன ஓட்டுநரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பொக்லைனை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், வாகனத்தை சிறுவனுக்கு ஓட்டக் கொடுத்த அதன் உரிமையாளரான பள்ளிக்கரணையைச் சோ்ந்த ராசகுமாா்(34) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.