லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில், சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Published On :17 ஜூலை 2026, 10:58 pm IST

சென்னை மதுரவாயலில், சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொளத்தூா் விநாயகபுரம் ராஜேந்திர பிராசத் தெருவைச் சோ்ந்தவா் தே.பிரவீண்ராஜ் (27). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்றாா். மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்துக்கு அருகே சென்றபோது பழுதாகி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியைக் கவனிக்காமல் மோட்டாா் சைக்கிள் திடீரென லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவீண்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சோ்மாநல்லூரைச் சோ்ந்த கோ.ரமேஷ் (47) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.