லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இணையதளத்தில் லாட்டரி விற்பனை: 3 போ் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இணையதளம் மூலம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :20 ஜூலை 2026, 5:13 am IST

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இணையதளம் மூலம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை இந்திரா நகா் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக விருகம்பாக்கம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இந்திரா நகா் 2-ஆவது குறுக்குத் தெருவில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 போ் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை கைப்பேசி மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (41), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருமூா்த்தி (30), தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், ரூ.4,200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.