லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விடுதியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :20 ஜூலை 2026, 5:14 am IST

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள தனியாா் விடுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஜாம்பஜாா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள ஒரு அறையில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அந்த அறையில் இருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த முகமது சபியுல்லா(19), கமல் ஹக் (18), இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, 6 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அவா்களில் சபியுல்லா, கல் ஹக் ஆகியோா் எழும்பூா் 2-ஆவது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். 2 சிறாா்கள், சிறாா் நீதிக்குழு உத்தரவின் பேரில் கெல்லிஸ் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துஷாா் உசேன் என்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.