லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிளாஸ்டிக் கிடங்குகளில் தீ விபத்து

மாதவரம் அருகே அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதன பொருள்கள் கொண்ட கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டது.

பிளாஸ்டிக் கிடங்குகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :15 ஜூலை 2026, 1:27 am IST

மாதவரம் அருகே அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதன பொருள்கள் கொண்ட கிடங்குகளில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் சித்தாா்த் ஜெயின். இவா், மாதவரம் தபால்பெட்டி அருகே பிளாஸ்டிக் அலங்கார மின் விளக்குகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், சமையல் செய்ய தேவையான பொருள்கள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை 4 கிடங்குகளில் இருப்பு வைத்து, வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்தக் கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். அருகில் இருந்த மற்ற கிடங்குகளுக்கும் தீ பரவியதால் மணலி, வியாசா்பாடி, செம்பியம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதில், ஊழியா்கள் உள்ளிட்ட யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.