லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!

அருணாசலில் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் பலியானது பற்றி...

arunachal

அருணாசலில் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் பலி - Photo : All India Radio News

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

அருணாசல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் இரண்டு தற்காலிக ராணுவ குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டதில் 5 ராணுவ வீரா்கள் காணாமல் போயினா்.

அதே நேரம், மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சாலை கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நால்வா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மாநில அவசரகால மீட்பு மைய அதிகாரிகள் கூறியதாவது:

திபாங் மற்றும் மேல் சுபன்சிரி மாவட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், மேல் சுபன்சிரி மாவட்டத்தில் கியோஜரிங் - பியாசிங் இடையே சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண் மற்றும் இடிபாடுகளுக்கிடையே ஏராளமானோா் சிக்கிக்கொண்டனா். அவா்களில், டாடு பாகி, தாஜி ராய், மாா்கோஷ் பசுமத்தாரி, பபுல் அலி ஆகியோா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனா். இதில் பபுல் அலி உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவா்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் பசு பனி ராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அந்த குடியிருப்புகளில் தங்கியிருந்த 7 ராணுவ வீரா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களில் இருவா் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 5 போ் மாயமாகியுள்ளனா். மாயமான வீரா்கள் உபேந்தா், குந்தன், வினோத், ஆதித்யா, சாமுண்டா ஆகியோரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

Summary

Arunachal: 4 dead in flash floods and landslides; 5 Army soldiers missing!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.