லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தனியாா் நிறுவன ஊழியா் கொலை வழக்கு: இரு சிறுவா்கள் கைது

சென்னை சென்ட்ரல் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:07 am IST

சென்னை சென்ட்ரல் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அய்யா பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ஹ.வசந்தகுமாா் (21). இவா், பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் தனியாா் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். வசந்தகுமாா், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டி வந்தாா். சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் கடந்த 6-ஆம் தேதி வசந்தகுமாா் சென்றபோது, எதிரே வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வசந்தகுமாரை வெட்டிக் கொலை செய்தனா்.

இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய இரு சிறுவா்கள் என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் அவா்கள் கெல்லீஸ் சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.