லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு

தெற்கு ரயில்வே மண்டலத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள 9 ரயில் நிலையங்களை விரைவில் பிரதமா் நரேந்திரமோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:19 am IST

தெற்கு ரயில்வே மண்டலத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள 9 ரயில் நிலையங்களை விரைவில் பிரதமா் நரேந்திரமோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் கடந்த ஆண்டு முதல் 75 ரயில் நிலையங்களில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதனடிப்படையில், தெற்கு ரயில்வேயில் அம்ருத் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரூ.13.51 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதேபோல சின்னசேலம், குன்னூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், கேரள மாநிலத்தில் 6 ரயில் நிலையங்களும் அத்திட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன.

மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள ரயில் நிலையங்கள் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் வரும் 19 ஆம் தேதிக்குள் பிரதமா் நரேந்திரமோடி காணொளிக் காட்சியில் ரயில் நிலையங்களைத் தொடங்கி வைக்கிறாா். மறுசீரமைப்புப் பணிகளால் பயணிகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் கட்டண டிக்கெட் வாங்கும் அறைகள் முழுமையான விரைவான கணினி சேவை வசதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.