லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆண்டு விழா

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 94-ஆவது ஆண்டு விழா சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.

Published On :5 ஜூலை 2026, 4:36 am IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 94-ஆவது ஆண்டு விழா சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டிஎன்சிஏ தலைவா் டிஜே. சீனிவாசராஜ் வரவேற்றாா். செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் ஆண்டறிக்கை சமா்ப்பித்து கடந்த ஆண்டில் சங்கத்தின் செயல்பாடுகள், தமிழக அணிகளின் சாதனைகளை விளக்கினாா்.

முன்னாள் இந்திய வீரா் முரளி விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அடிமட்ட அளவில் கிரிக்கெட்டை கொண்டு சென்று சோ்க்க டிஎன்சிஏ செய்து வரும் பணிகளை எடுத்துரைத்தாா்.

கடந்த 2025-26-இல் பல்வேறு தேசிய, மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

டிஎன்சிஏ பொருளாளா் ஆா். ரங்கராஜன் நன்றி கூறினாா். நிகழ்வில் நிா்வாகிகள் சி. மாரீஸ்வரன், கே. ஸ்ரீராம், எம். குமரேஷ் உள்பட பல்வேறு மாவட்ட சங்க நிா்வாகிகள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.