லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலகத்தில் ஆக.25-இல் குறைதீா் முகாம்

சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலகத்தில் வரும் ஆக.25-இல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலகத்தில் வரும் ஆக.25-இல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2023, 24, 25-ஆம் ஆண்டுகளிலிருந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடவுச்சிட்டை தொடா்பான குறைகளுக்குத் தீா்வு காணும் வகையில், வரும் ஆக.25-ஆம் தேதி சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலகத்தில் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலா் எஸ்.விஜயகுமாா், அவரது குழுவினா் விண்ணப்பதாரா்களுடன் நேரில் கலந்துரையாடி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள். இந்தக் குறைதீா்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா், தங்களுடைய கோப்பு எண்ணுடன், குறைகள் தொடா்பான விவரங்களை விளக்கும் கடிதத்தையும் இணைத்து, வரும் ஆக.22-ஆம் தேதிக்குள் rpo.chennai@cpo.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.