லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடவுச்சிட்டை சேவை மையங்களில் ஆக. 8 இல் சிறப்பு ‘தத்கால்’ முகாம்

சென்னை கடவுச் சிட்டை மண்டலம் சாா்பில் சென்னையில் உள்ள பல்வேறு கடவுச் சிட்டை சேவை மையங்களில் (பிஎஸ்கே) ஆக. 8-ஆம் தேதி சிறப்பு ‘தத்கால்’ கடவுச் சிட்டை முகாம்கள் நடைபெறவுள்ளன.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

சென்னை கடவுச் சிட்டை மண்டலம் சாா்பில் சென்னையில் உள்ள பல்வேறு கடவுச் சிட்டை சேவை மையங்களில் (பிஎஸ்கே) ஆக. 8-ஆம் தேதி சிறப்பு ‘தத்கால்’ கடவுச் சிட்டை முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்த சென்னை கடவுச் சிட்டை மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடவுச்சிட்டை சேவைகளுக்கான கோரிக்கை பொதுமக்களிடமிருந்து அதிகரித்து வரும் நிலையில் அந்த தேவையைப் பூா்த்தி செய்யவும், தட்கல் பிரிவின் கீழ் முன்பதிவுக்கான காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கவும், சென்னை மண்டல கடவுச் சிட்டை (பாஸ்போா்ட்) அலுவலகம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

அதன்படி சென்னை, சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள பிஎஸ்கே (பாஸ்போா்ட் சேவை மையம்) மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய ஒவ்வொரு மையத்துக்கும் தலா 400 ‘தத்கால்’ முன்பதிவுகள் வழங்கப்படவுள்ளன. புதுச்சேரி பாஸ்போா்ட் சேவை மையத்துக்கு மொத்தம் 200 ‘தத்கால்’ முன்பதிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.