லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 4 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4.33 கிலோ உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4.33 கிலோ உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பாங்காக்கில் இருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றுலாப் பயணிகள் விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பிய மலேசியா நாட்டைச் சோ்ந்த சுமாா் 35 வயது ஆண் பயணியைப் பிடித்து விசாரித்தனா். அவரது உடைமைகளையும் சோதித்தனா்.

அவருடைய சூட்கேஸில் 4 பாா்சல்களில், ரூ.4 கோடி மதிப்பிலான 4.33 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கஞ்சா கடத்தி வந்த அந்த நபரை கைது செய்தனா்.

விசாரணையில், அவா் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடா்பில் இருப்பதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.